கும்பகோணம் மார்ச். 08 –

இன்று உலக மகளிர் தினம் இந்நாளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் அரசு மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் மேலும் குடும்பத்தினர் என பல்வேறு தரப்பில் பெண்களுக்கு சிறப்பினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி மகளிரின் சிறப்பினையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் பெருமைப் படுத்துக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் பகுதியாக இன்று கும்பகோணம் உட்கோட்ட காவல் துறை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதின் அவசியம் மற்றும் உடற்பயிற்சி மனித ஆரோக்கியத்திற்கு எவ்வளவு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கும்பகோணத்தில் 10 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக்கான மினி மாரத்தான் (3 கி.மீ.) போட்டி நடைப்பெற்றது.

அந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளா் மகேஷ் குமார் கலந்து கொண்டு, பெண்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை தொடக்கி வைத்தாா்.

மேலும் இவ் மாரத்தன் ஓட்டம் உச்சிபிள்ளையார் கோவிலில் அருகில் தொடங்கி, கும்பகோணம் டைமண்ட் திரையரங்கம், ஆயிக்குளம் ரோடு, பழைய மீன் மார்க்கெட், நால்ரோடு வழியாக சென்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

மேலும் இவ் மினி மாரத்தன் ஓட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கலந்துரையாடலின் போது மாணவிகளிடையே  தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் எனவும், மேலும், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால்தான் எனவும், மேலும் நாம் வசிக்கும் நாடு கூட ‘தாய் நாடு’ என்று தான் அழைக்கப்படுகிறது. என்றவாறு, மேலும் அதுபோல் ஆறுகள், மலைகளென முக்கியமான இயற்கை வளங்கள் உட்பட அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் சூட்டப்படுகிறது எனவும், எனவே நம்நாடு எப்போதுமே மகளிரின் சிறப்பையையும் பெறுமைகளையும் போற்றி வணங்கக்கூடிய திருநாடாகும் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக திகழும் மகளிரை கவுரவிக்கும் வகையில்தான் இன்றைய நாளில் சர்வதேச அளவில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. என்றார்.

தொடர்ந்து இம் மராத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு, சால்வை அணிவித்தும், சான்றிதழ் மற்றும் கோப்பையும், வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் காவல்துறை ஆய்வாளர்கள் சரவணகுமார், நாகலட்சுமி ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி துணை தலைவர் சேரியோ மற்றும் காவல்துறையினர் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என்றவாறு திரளானவர்கள் பங்கேற்று இந்நிகழ்ச்சி சிறப்பாக அமையச்செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here