நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு.
கும்பகோணம், அக். 30 –
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்னரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறு தினம் நவம்பர் முதல் நாள் திங்கட்கிழமை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 48 பள்ளிகளைச் சேர்ந்த 141 வாகனங்கள் இன்று கும்பகோணத்தில் ஒரே இடத்தில் வைத்து (கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில்) ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இதில் வருவாய்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வின் போது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.