கும்பகோணம், நவ. 16 –

ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு இன்று கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி கொரோனா குறித்த, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திருக்கோயில் வளாகத்திலேயே, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அஸ்திரதேவரை சிவாச்சாரியார் மும்முறை அண்டா நீரில் முக்கி எழப்ப ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி வெகு சிற்பாக நடைபெற்றது. பின்பு அஸ்திரதேவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.   

மகாபிரளத்தின் போது அமிர்த குடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி ஸ்ரீ வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ நாககேஸ்வரர் என திருநாமம் பெற்றார்.

தாயார் பிரஹந்நாயகி ஸ்ரீ சூரியன் தனது கிரஹணம் மழுங்கி கலங்கி நின்ற போது அசரீரியின்படி சூரிய தீர்த்த்தத்தில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வர சுவாமியை வழிப்பட்டு பேறு பெற்றார். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்களிலும் தனது சூரிய கதிர்களால் நாகேஸ்வரரை வழிபடுவதை இன்றும் காணலாம். இங்கு சூரியனுக்கென்று தனி சன்னதியும் உள்ளது சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேஷத்திரம் என பெயர் பெற்றது. மேலும், இங்கு  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்தர பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இன்று ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானும் தனித்தனி ரிஷப வாகனத்தில் நாகேஸ்வரசுவாமி, பிரகன்நாயகியும், சண்டிகேஸ்வரும் திருக்கோயில்  வளாகத்தில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்னர் அஸ்திரதேவரை, சிவச்சாரியார் காவிரியாற்று நீர் நிரப்பிய அண்டாவில் மும்முறை முக்கி எழச்செய்ய ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடை பெற்றதையடுத்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலம் கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயில் ஆகும் ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை அழித்த பின்னர் காவிரி தென்கரையில் பூமியை பிளந்து வெளிபட்டு பிரம்மனின் கையில் வந்தமர்ந்தது பிரம்மா அதனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

 

ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை காட்டிலும் பன் மடங்கு பிரகாசமாய் ஒளிர அதனை கண்டு சூரியன் கர்வம் கொண்டார். சூரியனின் கர்வத்தை அடக்க ஸ்ரீ சக்கரம் சூரியனின் ஒளியை தன்னுள் அடக்கியது. ஒளியிழந்த சூரியன் தன் தவற்றை உணர்ந்து தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க பிராத்தணை செய்ததால் ஸ்ரீ சக்கரத்தில் சக்கரபாணிசுவாமியாக சூரியனுக்கு அருள் புரிந்தார். அது முதற்கொண்டு இந்த ஸ்ஷேஸ்திரம் பாஸ்கர ஸ்ஷேஸ்தரம் என போற்றப்படுகிறது. இத்தலத்தை சிறப்பித்து திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது

இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் சக்கரபாணிசுவாமிக்கு செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி, குங்குமம் ஆகிய ஆறு விதமான பொருட்களை கொண்டும் அர்ச்சனை செய்யப்படுகிறது மேலும் இது சூரியன், பிரம்மன், மார்கண்டேயர், அக்னிபகவான், அகிர்புதன்ய மகரிஷி ஆகியோர் வழிபட்ட புனித தலமாகும். இத்திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது,

இந்நிலையில், இத்தகைய சிறப்பு பெற்ற வைணவ தலத்தில் ஐப்பசி மாத கடைமுக துலா ஸ்தானத்தை முன்னிட்டு, இன்று விஜயவள்ளி தாயார், சுதர்சனவள்ளி தாயார் சமேதராய் சக்கரபாணிசுவாமி சிறப்பு பட்டாடை, விசேஷ மலர் அலங்காரத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள, அங்கு முதலில் பால சக்கரபாணி சுவாமிக்கும் தேன், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், என பலவிதமான பொருட்களை கொண்டு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, பட்டாட்சாரியாகர்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, புனித காவரியாற்று நீர் நிரப்பிய அண்டாவில், பால சக்கரபாணி சுவாமியை பட்டர் மும்முறை முங்கி எடுக்க, ஐப்பசி கடைமுக   துலா ஸ்தான தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here