கும்பகோணம், ஜன. 22 –

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியின் போது மேல் தூக்கி வைக்கப்பட்ட இணைப்பு கல்பாலம் கீழே விழுந்ததை  திமுக  அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பார்வையிட்டு விபத்துக் குறித்து கேட்டு ஆய்வு செய்தார்.

   திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கீழணை அருகே தஞ்சை – விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை 4 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு கடந்த 2010-ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது . அதன் படி  2017-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ 3.517 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நான்குவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தஞ்சையிலிருந்து விக்கிரவாண்டி வரையிலான பயண நேரம் 5 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகவும் குறையும் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here