கும்பகோணம், ஜன. 07 –

கும்பகோணத்தில் இன்று 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கும் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

மேலும், அதுப்போன்று இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை இத்திருக்கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க கருடாழ்வார் திருவுருவம் பொறிக்கப்பட்ட  கொடிக்கு, நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு பின்னர் கொடி ஏற்றப்பட்டது.

மேலும், கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

மேலும் இத்திருவிழா நாட்களில், நாள்தோறும் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பொங்கல் திருநாளான 15ம் தேதி ஞாயிற்க்கிழமை  தை தேரோட்டமும் நடைபெறயிருக்கிறது.

இவ்விழாவில் பக்தகோடிகள் அனைவரும் பங்கேற்று அருள்மிகு சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, மற்றும் பூமிதேவி தாயார்களின் அருள் ஆசி பெற்றிடுவது நலமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here