கும்பகோணம், ஜன. 10 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட மரங்கள் அதில் அடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு அப்பூங்காவில் நல்தரம் வாய்ந்த தடித்து உயர்ந்திருந்த ஒரு கோடிக்கும் மேலான மதிப்பிலான 15 க்கும் மேற்பட்ட மரங்களை மர்ம நபர்கள் அங்கிருந்து வெட்டி கடத்திவுள்ளதாக தெரிய வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பிளாக் டெவலப் மெண்ட் அலுவலர் மற்றும் பழவத்தான்கட்டளை ஊராட்சியிலும் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வரும் நிலையில்,

பழவத்தான்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக தற்போது திமுகவை சேர்ந்தவர் இருப்பதாகவும்,  அவரது தலைமையிலான ஊராட்சி நிர்வாகம் ஏன் அம்மரங்களை பாதுகாக்க தவறியது ஏன் எனவும், இதனால் ஊராட்சிக்கு சொந்தமான ரூபாய் 1 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தியதின் விளைவாக பொருள் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.எனவே இந்த குற்ற நிகழ்வுக்குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றத்தில் ஈடுப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என இன்று அதிமுகவினர்  கோட்டாட்சியரிடம் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன் என்.ஆர்.வி.எஸ். செந்தில் மாநில துணை செயலாளர் கே. ஜி. லெனின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.

தொடர்ந்து ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் பேசுகையில் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. இதில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள 30க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை மட்டும் வெட்டி கடத்தி உள்ளனர். இந்த மரத்தை அப்பகுதியில் உள்ள திமுக  ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமல் இச்சம்பவம் நடந்திருக்க முடியாது தேக்கு மரத்தை வெட்ட சொன்னவர்கள் யார் மரத்தை வெட்டியவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு அளித்தோம்.

குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக இணை துணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவுபடி குற்றவாளிகளை கைது செய்யும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

பேட்டி:

சோழபுரம் க. அறிவழகன்

அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here