கும்பகோணம், ஜூலை. 22 –

கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை பெருமைப்படுத்திடும் வகையில் பிரத்யோக பாடல்களை பாடியும், அதற்கேற்ப நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் நாள், தேசிய மாம்பழ தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பித்திடும் வகையில்  இன்று செட்டிமண்டபம் புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் அதன் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மாம்பழ தின கொண்டாட்டத்தில், நூற்றுக்கணக்காண குழந்தைகள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தின்  பெருமையை உணர்த்திடும்  வகையில் பிரத்யோக பாடல்களை பாடியும், அதற்கேற்ப நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

இது பார்வையாளர் வரிசையில் இருந்த சக மாணவ மாணவியர்களையும், ஆசிரிய பெருமக்களையும் மிகவும் கவர்ந்தது.

தொடர்ந்து ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி, கிளி மூக்கு, பாதிரி, பச்சையரிசி, நாட்டு உருண்டை, காலாப்பாடி, சிந்து, கேசரி உள்ளிட்ட வகை வகையிலான மாம்பழங்களையும், மாங்காய் மற்றும் மாம்பழத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட மாங்காய் சாதம், மாம்பழசாறு, என திட மற்றும் திரவ உணவு வகைகளையும் காட்சிப்படுத்தியும் அசத்தியிருந்தனர்.

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றானது மாம்பழம், இம்மாம்பழம் தாகத்தை தணிப்பதிலும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here