கும்பகோணம், ஜன. 6 –

கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மல்லிகை மஹாலில் சமையல் கலைஞர் சங்க தலைவர் கொட்டையூர் ரவி என்கிற கீர்த்திவாசன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான சிறப்பு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு  இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 210 சமையல் கலைஞர் குடும்பத்தினருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வெல்லம் பாசிப்பருப்பு மிளகு சீரகம் நெய் ஏலக்காய் முந்திரி மற்றும் ஹாட் பாக்ஸ் உள்பட 11 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சமையல் கலையில் 50 ஆண்டு கடந்து மூத்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  பல மாநாடுகளில் சென்று கோல்டு மெடல் வாங்கி பெருமை சேர்த்த அறுசுவை அரசர் விருது கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு உழைப்பால் உயர்ந்த நளபாக சீரோன் மணி விருது கொட்டையூர் சீனிவாசனுக்கும் லண்டன் சென்று சமையல் கலையை பரப்பிய நளபாக இளவரசர் விருது சேதுராமன் உள்ளிட்ட 28 சமையல் கலைஞருக்கு பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் சுரேஷ் துணைத்தலைவர் சுரேஷ் பொருளாளர் அபிஷேக் என்கிற முரளி மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பையும் மற்றும் விருதுகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here