கும்பகோணம் அருகே நெய்வாசல் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பகோணம், செப் . 25 –
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்ற 32 வயதுடைய இவர் திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
ஏற்கனவே, இவருக்கு 5 வயதில் மிருதுளா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அவரது மனைவி மாரியம்மன் வயது 27, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள், ‘108’ ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
பந்தநல்லூர் அருகே, பிரசவ வலியால் துடித்த மாரியம்மாள்க்கு, ஆம்புலன்ஸ் ‘பைலட்’ அவசர கால மருத்துவ நுட்புனர் ஆகியோர், மருத்துவர் ஆலோசனைப்படி, ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர். மாரியம்மாளுக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. முதலுதவி சிகிச்சை அளித்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளதாக, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். இரு உயிர்களையும் காப்பாற்றி தந்த 108 ஆம்புலன்ஸ் அவச சிகிச்சை நிபுணர் மணிகண்டன் மற்றும் ஒட்டுனர் சதீஷ் ஆகியோருக்கு மாரியம்மாள் குடும்பத்தினரும் கிராம மக்களும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.