கொடைக்கானல், டிச. 23 –

கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சியில் உள்ள நல்லூர்காடைச் சேர்ந்த கோமாளி என்ற பழனிச்சாமி என்கிற விவசாயி இன்று (23.12.21 வியாழக்கிழமை) யானை தாக்கி பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அதனை சுற்றி உள்ளவர்களும் அச்சத்துடனும் பயத்துடனும் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வேலைகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளனர்.

கடந்த ஒரு மாத காலங்களாக இந்த யானையின் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த நிலையில்,  இந்த காட்டு யானை இப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக முகாமிட்டு  இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அதனை வனத்துறை வனக்காப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து விரட்டும் முயற்சியில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து தற்போது கடந்த இரண்டு வருடங்களாக அக்காட்டு யானை அப்பகுதி மக்களை அவ்வப்போது தாக்கி உயிர்களை பறிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள் ..

 மேலும், கடந்த மாதம் அவ்யானையின் தீவிர தாக்குதல் தொடர்ந்ததைத் தொடர்ந்து வனத்துறை காவலர்கள் இதனை விரட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அம் முயற்சிகளும் தோல்வி ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது ஒரு உயிரானது பறிக்கப்பட்டு உள்ளது.. இதற்கு தமிழக அரசு முழு கவனம் செலுத்தி இதற்காக தனி குழு ஒன்றை அமைத்து அப்பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அப் பகுதியில் இருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தி வேறு ஏதேனும் பகுதிகளில் சென்று பாதுகாத்துக் கொள்ள பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தற்பொழுது தமிழக அரசு கவனம் செலுத்தி துரித நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இத்துயர சம்பொங்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள். மேலும் இப்பகுதி விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி பொருளாதார இழப்புக்களையும், உயிர் அச்சத்தையும் அக்காட்டு யானை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு இல்லாத நிலைமையில் தற்போது அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here