சென்னை, ஆக. 11 –

வருகின்ற ஆக 15 ஆம் தேதியன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டும் மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மற்றும் பெட்ரோல். டீசல் .விலை உயர்வுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பியும், இதுக்குறித்து வாசகங்கள் பொறித்த துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு வழங்கியும், பாதயாத்திரை நடைப்பெற்றது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் மக்கள் தலைவர் ராகுல்காந்தியின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலின் பேரில் இப்பாதையாத்திரையை தமிழக முழுவதிலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கதிர்வேடு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் மாபெரும் பாதயாத்திரை பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆண், பெண்ணென தொண்டர்கள் இப்பேரணியில் கைகளில் தேசிய மற்றும் காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏந்தியாவறு பங்கேற்றனர்.

இப்பேரணி கதிர்வேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவங்கியது.

இப்பாதயாத்திரை பேரணி கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் வழியாக சென்று புழல் கேம்ப் அருகாமையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்பு அங்கிருந்து சென்னை செங்குன்றம் வரை சென்று இப்பாதயாத்திரை பேரணி நிறைவுப்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here