கும்பகோணம், பிப். 6 –
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் கிராமத்தினரால், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 04ம் தேதி வெள்ளிக்கிழமை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், தன்வந்திரி சௌபாக்கிய லட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் யாக சாலை பூஜைகள் மஞ்சக்குடி வாசுதேவ பட்டாட்சார் தலைமையில் தொடங்கி, யாகசாலை பிரவேசம், ரக்ஷாபந்தனம், கோபூஜை, மகா சாந்தி ஹோமம், வசோத்தாரா ஹோமம், ஆகியவை நடைபெற்று, இன்று காலை நான்காம் கால யாகபூஜை நிறைவில், மகா பூர்ணாஹ_தி, மகா தீபாராதனையும் நடந்த பிறகு நாதஸ்வர மேள தாளம் மற்றும் கேரள ஜெண்டை மேளம் முழங்க, கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்