காஞ்சிபுரம், ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால் அடுத்த 5 ஆண்டுக்கும் எங்க பகுதியில் 1000 ஓட்டு வாங்கி தரேன் என வேட்பாளருக்கு வாக்குறுதி அளித்தார்.

காஞ்சிபுரம் தனித் தொகுதி பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைத்து கிராம பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . பாஜக அரசு செய்த சாதனைகள் மற்றும் பாமக ஆட்சியில் பங்கு வகித்த பொழுது செய்த சாதனைகளை விளக்கிக் கூறி மாம்பழச் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட , கூத்திரம்பாக்கம் ,  ஆட்டுப்புத்தூர், காரை, கோவிந்தவாடி அகரம் , உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்குகளை சேகரித்தார்.

நீர்வள்ளூர் என்ற பகுதியில் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுது , அங்கிருந்த சில பெண்கள் ” எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் “.  உடனடியாக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் , ” எங்களுடைய கட்சியின் முதன்மை கோரிக்கை பூரண மதுவிலக்கு தான் ” எங்களுக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் பூரண மதுவிலக்கை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தார். இதனைக் கேட்ட பெண்மணி ஒருவர் , டாஸ்மார்க் கடையை மூடி விட்டீர்கள் என்றால் இந்த 5 ஆண்டு இல்லை அடுத்த 5 ஆண்டு கூட உங்களுக்கு தான்  ஓட்டு போடுவோம், எங்கள் பகுதியில் 1000 ஓட்டை நான் வாங்கித் தரேன் ” என தெரிவித்தனர். இதேபோன்று அடுத்த ஊரிலும் மூதாட்டி ஒருவர் இதே கோரிக்கையை முன் வைத்ததற்கு , ” மது கடையை மூடுவது தான் எங்களுடைய லட்சியம் , பாரதப் பிரதமரும் அதேதான் வலியுறுத்தி வருகிறார் என வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிக்க சேர்ந்த ஜோதி வெங்கடேசனுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் , பாமகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தங்கள் கட்சி கொடியினை ஏந்தியவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here