காஞ்சிபுரம், டிச. 17 –

கந்தபுராணம் அரங்கேறிய புகழ்மிக்க திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் 4 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்துரத்தினவேல்,ஆய்வாளர் ப்ரீத்திகா, கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகளை எண்ணும் பணி ஆலய வளாகத்தில்  நடைபெற்றது.

இதில் மொத்தம் ரூ.13 இலட்சத்து 51ஆயிரத்து,227ரூபாய் மற்றும் தங்கம் 33.700 கிராமும், வெள்ளி 1277 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here