காஞ்சிபுரம், டிச . 21 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயிகளின் நெல்லானது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றினை சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை நெல் அரவை ஆலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து காஞ்சிபுரம்-முசரவாக்கம் சாலையிலுள்ள நெல் அரவை ஆலைக்கு லாரி மூலம் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு லாரியானது சென்றது.
இந்த லாரியானது அரவை ஆலையின் வாயிலில் நுழைய முற்பட்ட போது இடது புறத்திலிருந்த பள்ளத்தில் இறங்கி அல்லாரியானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் ஓட்டுநர்,சுமை தூக்குபவர்கள் என யாருக்கும் எவ்வித காயங்களுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது போன்ற சரக்கு லாரிகள் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி சென்று விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருவதும் கடந்த வாரம் ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் இதே போன்று சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும் குறிப்பிடதக்கது.