பொன்னேரி, ஜன. 07 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள 8 சங்கங்களை சேர்ந்த 35 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 420 பயனாளிகளுக்கு ரூ 1.41 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்தற்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கப் பட்டது.

இவ்விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 21, 927 பயனாளிகளுக்கு ரூ.101.52 கோடி தொகை ஏற்கனவே தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கப்பட்டு நகைகள் உரிய நபர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. குறிப்படத் தக்கதாகும்.

மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று பொன்னேரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பி வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பொன்னேரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ரமேஷ் நன்றிவுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here