பாபநாசம், மார்ச். 26 –
பாபநாசம் அருகேவுள்ள திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் ஓ.எஸ்.ஜெ. காஜா முகையதீன் தலைமை வகித்தார். மற்றும் பள்ளி அறக்கட்டளை டிரஸ்டி ஓ.எஸ்.ஜெ. ஜொஹரா கனி முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பாபநாசம் பெரிய பள்ளிவாசல் இமாம் முகமது இலியாஸ் கிராத்து ஓதினார். விழாவில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கலந்துக் கொண்டு இப்தார் நோன்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர்
வருடத்தில் ஒரு மாத ரமலானில் பசித்திருந்து இறைவனை வணங்குவது ஈருலகிலும் உன்னதமான ஏற்றமிகு வாழ்வை தரும் என்பதே நோன்பின் தனிச்சிறப்பாகும் என்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்கனி , பாபநாசம் பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் ஹாஜா மைதீன், செயலாளர் ஷாஜகான், முன்னாள் இமாம் அப்துல் ரகுமான், வழக்கறிஞர் முகமது சுபஹான், பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி தாளாளர் எம்.ஏ.தாவூத் பாட்சா , வழுத்தூர் சமுதாய புரவலர் வெள்ளம்ஜி எம்.ஜெ. அப்துல் ரவூப் மற்றும் ஜமாத்தார்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பு தாளாளர் ஜெயந்தி சித்தார்த்தன், பள்ளி நிர்வாகி சித்தார்த்தன் ஆகியோர் செய்திருந்தனர்.