கும்பகோணம், மே. 20 –

கும்பகோணம் அருகே உள்ள கலிப்புலியூர் இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மாணவர்களிடையே உரை நிகழ்த்தும் போது, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாகவோ, உயர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர்ந்த பொறுப்புக்களை ஏற்க கூடியவர்கள். ஆதலால் நீங்கள் அனைவரும் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று எப் பொறுப்புக்கும் நீங்கள் வந்தாலும் அதில் கடமை உணர்வோடு நன்கு செயலாற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள கள்ளபுலியூரில் தனியார் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி நீண்ட காலமாக அப்பகுதியில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் அக்கல்லூரியின் ஆண்டு விழா, இருதினங்களுக்கு முன்பு, அக் கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமையிலும்,  கல்லூரி முதல்வர்கள் ஜெயகுமாரி (கல்வியியல் கல்லூரி), கருணாநிதி (கலைக்கல்லூரி) ஆகியோர் முன்னிலையிலையும் நடைப்பெற்றது.

மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் குத்துவிளக்கேற்றி வைத்து அவ்விழாவினை விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

அவ்வுரையின் போது, “இன்றைய கல்லூரி மாணவ மாணவியர்கள் நாளை முதலமைச்சர்களாகவோ, உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவோ இன்னும் எண்ணற்ற உயர் பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் வரலாம் எனவும், மேலும் அப்போது இன்றைய மாணாக்கர்கள் எத்துறை பொறுப்பிற்கு வந்தாலும், அதில் ஒரு கடமை உணர்வை ஏற்படுத்திக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றும், மேலும், மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்ளின் குறைகளை கனிவோடு அணுகி, செவிமடுத்து முழுமையாக அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்றும் எஸ்.கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அவ்விழாவில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் மாலினி விஜயகுமார், அறங்காவலர் விக்னேஷ்  குமார், கல்லூரி பேராசிரிய பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here