தஞ்சாவூர், மே. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால வேள்வியுடன் தொடங்கியது,

அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று,  மேளதாளங்கள் முழங்க  யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ சந்தோஷி அம்மன், ஸ்ரீ ஆக்ஞா கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு மகா தீபாரதனை  காட்டப்பட்டது, இதில் திருக்கயிலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சாமிகள் உள்ளிட்ட பொதுமக்கள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here