திருவாரூர். பிப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின்  இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக டெல்டா மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது..              தற்போது..அறுவடை செய்த பின் வைக்கோலை கட்டு கட்டும் இயந்திரம் மூலம் வைகோலை கட்டுகளாக கட்டி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றது.

இருந்த போதிலும்.. வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் வாங்கி செல்ல இந்த ஆண்டு போதுமான வியாபாரிகள் வரவில்லை என்பதால், அறுவடை முடிந்த வயில்களில் வைக்கோல்கள் அப்படியே உள்ளது.. மேலும் சாலை ஓரங்களிலும் கொட்டப்பட்டுள்ளது..

அதுக் குறித்து தமிழக விவசாயி நல சங்கத்தின் செயலாளர் ராமமூர்த்தி சொல்லும் போது விவசாயிகளின் நிலைமை படு பாதாளத்திற்கு போய்விட்டது. எனவும் மேலும் விவசாயிகளை ஆலோசிக்காமல் கடந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீரை திறந்ததினால்.

குறுவைக்கும், சம்பாவிற்கும் தண்ணீர் சரியான முறையில் வழங்கப் படவில்லை எனவும் மேலும், பருவமழையும் பொய்த்து போனதால் அரசிடமிருந்து நிவாரணம் கேட்டும் எந்த பயனும் இல்லை மேலும் காப்பீடு செய்தாலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் தனியார் நிறுவனங்களுக்கு சென்றது.

மேலும் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு கிடைக்கக்கூடிய வைக்கோலுக்கும் போதிய விலை தற்போது கிடைக்கவில்லை எனவும், விவசாயிகளுக்கு பத்து ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்.

விவசாயிகளை இந்த மோசமான நிலையிலிருந்து காப்பாற்றுவதற்கு வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் காகித ஆலை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.

 

பேட்டி: ராமமூர்த்தி,

செயலாளர்,

(தமிழக விவசாய நல சங்கம்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here