கும்பகோணம், மார்ச். 04 –

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் அரசு பஸ் மற்றும் மினி வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டது. இவ்விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள் இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் மேலவெளி அருகே ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்தும் கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் நோக்கி வந்த மினி லோடு வேன் ஆகியவை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் பன்றி வந்ததால் எதிரில் வந்த மினி லோடு வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. அரசு பஸ் மோதிய வேகத்தில் மினி வேனை மோதிகொண்டு சென்ற அதிர வைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

   மினி லோடு வேனில் நக்கம்பாடி முஸ்லிம் ஜின்னா தெருவைச் சேர்ந்த சங்கர் வயது 40 என்பவரும் கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த தீரன் வயது 35 என்பவரும் வந்துள்ளனர். இருவரும் சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர்  இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இவ்விபத்துக் குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சரியான பாதையில் வந்த மினி லோடு வேன் மீது, சாலையின் குறுக்கே வந்த பன்றியின்மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் திருப்பிய போது மினி சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here