திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தனித் தொகுதியில் அதிமுக , திமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. அதாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கு நல்லதம்பியும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில் என்பவரும், பாஜக சார்பில் பொன்.வி. பாலகணபதி என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்பவரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி தமிழ் மதி என்ற பெண் வேட்பாளர் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி லதா உடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.