ஆவடி, ஜன. 01 –

ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிப்புரிபவர்களுக்கு ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில்    ஐந்து கட்டளைகளை கடைப்பிடிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கும் போது,

அன்பார்ந்த காவல் சொந்தங்களே,

உங்களுக்கு எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கிடும் என தான் நம்புவதாகவும், மேலும் கடந்த ஆண்டின் சாதனைகளையும் இந்நாளில் சிந்திக்கும் படியும், மேலும் தொடர்ந்து புதிய ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயிக்கவும் இதுவே தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஓராண்டை வெற்றிக்கரமாக நாம் அனைவரும் இணைந்து நிறைவு செய்துள்ளோம் என்றும், அதில் உங்களது பங்களிப்பு மற்றும் ஆதரவு இரண்டும் மிகவும் மகாத்தானதெனவும், இதுவே நமது துடிப்பான ஆணையரகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருந்ததெனவும், அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள் எனவும், அப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் நமது ஆணையரகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் மனதில் நினைவுக் கொள்ள வேண்டியது என்னவெனில், மக்களுக்கு சேவை செய்வதே நமது முன்னுரிமையாக இருத்தல் வேண்டும் எனவும்,

நீங்கள் ஏன் காவல்துறையில் பணியாற்றுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை பாதுகாத்து சேவை செய்யவும், உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என்றவாறும்,

உங்கள் சேவையில் நீங்கள் எப்போதும் உறுதியாகவும், சட்ட அமலாக்கத்தில் சமீபத்திய நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றிடுங்கள், தொடர்ந்து மிகச் சிறப்பாகவும், திறம்படவும் பணியாற்றிட அது உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும்,

மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை எப்போதும் வைத்திருக்க கவனம் கொள்ளுங்கள். காவல் பணியில் முழுமையாக ஈடுப்பட மன உறுதியும், உடல் ஆரோக்கியமும் மிக அவசியம் தேவைப்படுகிறதெனவும் ஆதலால் உடலுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அது மனதிற்கு ஊக்கமளிக்கிறதெனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐந்தாவது கட்டளையாக நாம் ஒரு பெரிய குடும்பத்தில் அங்கம் வகிக்கிறோம் எனவே அதனின் பாதுகாப்பிற்கு மிக பொறுப்பு மிக்கவர்களாக நாம் உள்ளதால் எவ்வித பயமின்றி ஊக்கத்துடன் தொடர்ந்து பணிப் புரிய வேண்டும் எனவும், மேலும் நமது ஆணையரகத்தை நாட்டிலேயே சிறந்த ஆணையரகமாக உருவாக்கியதற்காக உங்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக  ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here