தஞ்சாவூர், மார்ச். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வாரிசு முறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும் எனவும், மேலும் கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று கைரேகை பெறுவதையும், விடுமுறை நாட்களில் கைரேகை பதிவு செய்ய வலியுறுத்துவதையும் கைவிட வேண்டும் எனவும், பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here