பண்டிச்சேரி, பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …

பாண்டிச்சேரி வருமான வரி ஊழியர்கள் சம்மேளனத்தின் 72 ஆவது ஆண்டு துவக்க நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி தலைமை வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி ஊழியர்களின் சம்மேளனத்தின் 72 ஆவது துவக்க நாள் கொண்டாட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி கிளையின் தலைவர் குரு ராகவேந்தர் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வருமான வரி ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு அக்கூட்டரங்கில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருமானவரித்துறையைச் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். புதுச்சேரி வருமான வரி ஊழியர்கள் பலரும் துவக்க நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று வெகுச்சிறப்பாக அவ்விழாவினை கொண்டாடினார்கள்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here