திருவாரூர், மே. 21 –

திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில்  தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.

திருவாரூர் அருள்மிகு  தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு இவ்விழாவை நேற்று துவங்கி வைத்தார். மேலும் இவ்விழா மூன்று நாட்கள் நடைப்பெறும் மேலும் இவ்விழாவில் கமலாலய குளத்தை மூன்று முறை வலம் வரும் இந்நிகழ்விற்கு திருவாரூர் மட்டமல்லாது . இம்மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து திரளானோர் கலந்துக் கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு சுகாதாரம், கூட்டத்தைக் கட்டுப்படுத்த மற்றும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அசாம்பாவித செயல்கள் ஏதும் நடந்திட வண்ணம் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் பார்த்து ஆய்வு.செய்து பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் 500 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு செயல்படும் விதம் குறித்து அறிவுறுத்தினார்.

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் தெப்பத்திருவிழா நேற்று (20.05.22) முதல் 22.05.22 நாளை வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி மாலை துவங்கி அதிகாலை வரை நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக  காவல் பாதுகாப்பு பணிக்கு 500 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக பேரிடர் மீட்பு பயிற்சி (SDRF) பெற்ற காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நிகழ்ச்சி நடைப்பெறும் தெப்பத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here