pic file copy

போளூர் செப்.26-

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சந்தை மேடு எனும் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வாரந்தோறும் சனிக்கிழமை சனிக்கிழமை அன்று விடியற்காலையில் தொடங்கப்படும் மாட்டுச் சந்தை மற்றும் உழவர் சந்தை இதனை நிறுவியவர் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி நாயக்கர் என்பவர். இவர் காங்கிரஸ் தியாகியாக இருந்துள்ளார். அது மட்டுமின்றி காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 30 ஆண்டுகளாக கேளூர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

நாராயணசாமி என்பவர் சொந்தமாக நிலம் வாங்கி நமது ஊருக்கு இது போன்ற சந்தை அமைக்க வேண்டுமென்று சொந்த நிலத்தில் சந்தை அமைத்து கொடுத்துள்ளார்.  அதுமட்டுமின்றி சந்தைக்கு நினைவாக அவரது உருவ சிலை வைக்கப்பட்டது,  அச்சிலையானது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின்றி காணப்படுவதால் சந்தைக்கு வந்து செல்லும் வியாபாரிகளும் விவசாயிகளும் அவரது உருவ சிலைக்கு முறையான பாதுகாப்பு மற்றும் அவரது இனிய நாளை சந்தைக்கு உகந்த நாளாக கொண்டாட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.நாராயணசாமி நாயக்கர் என்பவர் கால்நடை மருத்துவமனை அரசு உயர்நிலைப்பள்ளி பிரசவ விடுதி பஸ் வசதி தெருக்களில் மின்சார வசதி போன்ற பல வசதிகள் ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here