சென்னை, டிச. 26 –
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பி. காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வேகா ( சி.எஸ். அகடாமி ) அமெரிக்கா சிக்காகோ பல்கலைக் கழகத்தில் மைக்ரோ பயாலஜி ரூ. 3 கோடி மதிப்பிலான மேற்படிப்பினை கட்டணமில்லாது படிப்பதற்கு தேர்வானதை தொடர்ந்து தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பாராட்டி, நல்லமுறையில் கல்விப் பயின்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். உடன் மாணவியின் பெற்றோர் உள்ளனர்.