கும்பகோணம், டிச. 19 –

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள வேலம்மாள் எனும் தனியார் பள்ளி பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அப்பள்ளியின் முகப்பு பாதை அப்பள்ளித்தாளளர் மற்றும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக திடீரென அப்பாதை மூடப்பட்டது.

மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவரகள் இப்பள்ளியில் படித்து வருவதாக தெரிய வருகிறது. மேலும் இப்பள்ளியின் முகப்பு மூடப்பட்டுள்ளதால் பள்ளி வாகனம் அனைத்தும் நூற்றுக் கணக்கில் குழந்தைகள் வசிக்கும் குடியிருப்பு பாதை வ.ழியாக செல்வதால்  அப்பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் விபத்துக்கள் ஏற்படவாய்ப்பு உள்ளதாக அச்சம் கொள்கின்றனர்.

இந்நிலையில் முகப்பை திறந்து விடக்கோரி பெற்றோர்கள் மற்றும் பிஜேபி சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது. அதனிடையே அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று உண்ணவிரதப் போராட்டத்தை கைவிட்டு, போராட்டக்காரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் பரமகுரு மாநகரத் தலைவர் வெங்கட்ராமன் ஒன்றிய தலைவர்கள் சுரேஷ் சரவணன் ஜெகநாதன் ஹரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளான பெற்றோர்கள் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here