மீஞ்சூர், பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….

திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வடசென்னை அனல் மின் நிலையம் பாகம் ஒன்றின் நுழைவு வாயில் முன்பு  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  வடசென்னை அனல் மின் நிலைய கிளை சார்பில் மின்வாரிய பிரிப்பு முத்தரப்பு ஒப்பந்தத்தை கைவிடக் கோரி கண்டன முழக்கப் போராட்டம் திட்டத்தலைவர் ஜி பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

அதில் அவர்கள் அவ் ஒப்பந்தத்தால் பொறியாளர்கள் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பெரிதும் பாதிக்கப்படுவதை கண்டித்து கண்டன முழக்கங்களை உரக்க எழுப்பினார்கள்.

மேலும் அப்போராட்டத்தின் நடுவே கண்டன உரையினை தோழர் எஸ்.ராஜேந்திரன் மாநில பொது செயலாளர் மற்றும் தோழர் கெ. ஆர்.முத்துசாமி செயலாளர் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

நிறைவில் ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தின் சார்பில் நன்றிவுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் அப்போராட்த்திதில் ஈ. ரவி திட்ட செயலாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அப்போராட்டத்தில் பங்கேற்றது அந்நிகழ்விற்கு மேலும் வலுவைச் சேர்த்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here