சின்ன வழுதம்பேடு, மார்ச். 24 –
கும்மிடிப்பூண்டி அருகே வழுதம்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம் திருவீதி திருவிழா மூவாயிரம் பேருக்கு இரைச்சியுடன் உணவளித்து நேர்த்திக்கடன் தீர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு கிராமத்தில் அருள் பாவித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய திருவீதி உலா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அப்போது எட்டி அம்மன் ஆலயத்திலிருந்து அங்காளம்மன் ஆலயம் வரை பெண்கள் பால்குடம் ஏந்தியபடி ஊர்வலம் வந்தனர். பின்னர் நடைபெற்ற அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்வின் போது சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தெருத்தெருவாக பரை, பம்பை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் போட்டனர்.
முன்னதாக கடந்த 5 நாட்களாக நடைபெறும் இத்திருவிழா நிகழ்வில் வி எஸ் ரகு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கினார். கடைசி நாளான இன்று சுமார் 3 ஆயிரம் பேருக்கு இரைச்சியுடன் கூடிய உணவு வழங்கி அவரது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.