கும்பகோணம், ஏப். 20 –
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் MRB செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகள் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை மேலும் காலம் குறிப்பிடாமல் தடை செய்ததே உடனே திரும்பப் பெற வேண்டும் சாலை பணியாளர்கள் 41 மாத பணிநீக்கம் காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் 21 மாதம் ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் 2 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சைக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும் கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும் மத்திய அரசு வழங்கிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வேஸ்வரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்வரின் கவனத்தை இருக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஊரக வளர்ச்சித்துறை அமைப்பாளர் ராஜன் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பிரபாகரன் வணிகவரித் துறை பணியாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.