ஆவடி, மார்ச். 08 –
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும் வன பாதுகாப்பு சமூக ஆர்வலர்களும் நட்டு வைத்தனர்.
பின்னர் தாளாளர் செய்தியாளர் சந்திப்பில், ஒவ்வொரு குடும்பத்தையும் காக்கக் கூடியவர் பெண்கள்தான் அதே போல் நம் நாட்டையும் நன்கு செழிப்பாக இருப்பதற்காகவும், ஒவ்வொரு பெண்மணிகளும் ஒவ்வொரு மரம் நடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அருகில் உள்ள மாநிலங்களான கர்நாடகா, கேரளா போல் இருக்கும் மாநிலத்தில் அவர்கள் அதிக அளவில் வனத்தில் மரங்களை பாதுகாத்து வருவதால், அங்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் போதிய அளவிற்கு மழை வருவதாகவும், தமிழ்நாட்டின் இதுபோல் வனத்தை பாதுகாத்தால் மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் நம் தமிழகமும் இருக்குமென்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பெண் மருத்துவர்கள் பெண் வழக்கறிஞர்கள், கைரலி பொதுநல சங்க தலைவர் கோபிநாத், செயலாளர் விஜயன், துணைத்தலைவர் சி ஏ நாயர், மற்றும் கமிட்டி மெம்பர் ராஜேஷ், பாலசுப்பிரமணியன், சுரேஷ், விஜயகுமார், சுஷ்மா, பிந்து, சஜிதா, சந்திரிகா, ரேஞ்சு, சைலஜா, சிந்து, ஆசிரியர் தீபா, மகளிர் குழு மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.