தஞ்சாவூர், நவ. 07 –

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுக்கூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் டிராக்டர் வைத்துள்ள விவசாயிகள் ரொட்டவேட்டர் கருவி வாங்குவதற்கு உழவன் செயலியில் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது பதிவு செய்துள்ள விவசாயிகளின் ஆவணங்கள் ட்ராக்டர் அதன் ஆர்சி புக் ஆகியவற்றை ஆய்வு செய்த பின் விவசாயிகள் அரசு அங்கீகரித்த நிறுவனத்தின் மூலம் ரொட்டவேட்டர் முழு விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பொது விவசாயிகளுக்கு ரூபாய் 34,000 மற்றும் பெண் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அவர்கள் பெயரில் டிராக்டர் மற்றும் ஆர்சி புக் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய ஆதார் வங்கிக் கணக்கு நகல்கள் பெற்றுக் கொண்டு ரூபாய் 42000 பின்னேர்ப்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

மதுக்கூர் வட்டாரத்திற்கு முக்கியமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்  வழங்கப்படுகிறது. மானிய திட்டங்களில் 20% பிற பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விவசாயிகள் உழவன் செயலில் பதிவு செய்து தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக் கொண்டார்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாவாஜி கோட்டையை சேர்ந்த பொது விவசாயி ஒருவருக்கு ரூபாய் 34,000 மானியத்தில் அட்மா திட்ட மதுக்கூர் வட்டார செயற்குழு தலைவர் இளங்கோ அவர்கள் வழங்கினார். ரொட்டவேட்டருடன் வழங்கப்படும் இணைப்பு கருவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு வழங்கினார். பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி உதயகுமாரிக்கு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு முருகேஷ் தினேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர்செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here