தஞ்சாவூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரம் பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக கோவிலில் உள்ள யாகசாலைக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் 18 கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்கள் காசவளநாடு என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் என்பது மிகவும் பழமையானதாகும். மேலும் அத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருப்பணிகளை 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அத்திருக்கோயில் கும்பாபிஷேகம்எதிர் வரும் மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று யாகசாலை பூஜை துவங்கியது
தன் தொடர்ச்சியாக கல்லணை கால்வாய் ஆற்றில் இருந்து புனித நீர் கலசம் யானை மீது வைக்கப்பட்டு யாகசாலை மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது..
அப்போது பெண்கள் கோலாட்டம், கொம்பு இசை, தப்பாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பெண்கள் முனைப்பாரி சுமந்து வான வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.





















