திருவள்ளூர், பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ..

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா  நடைபெற்றது.

அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜாஜி, வட்டார தலைவர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் அவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக எல்லாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சாதுசுந்தர்சிங், கல்பனா, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கட்டம்மாள், துணை தலைவர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஜெகநாதன், ராஜேஷ், சமூக சேவகர் மற்றும் வழக்கறிஞருமான ராதிகா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் உதவி ஆசிரியர் ஜெ.சரண்யா 2023-2024-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். பின்னர்,2024-2025-ம் கல்வியாண்டிற்கான முதல் வகுப்பில் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை  மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். பின்னர், அந்த மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம், பேக், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினர்.

மேலும், பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும், பரிசு கோப்பைகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின்னர், மாணவ, மாணவியர்களின் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகளும், தேசபக்தியை வலியுறுத்தும் நாடகங்களும், உடல் நலத்தை பேணிக்காக்கும் வகையில் சிலம்பப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.

அவ்விழாவில் நட்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள்,இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில்,பள்ளியின் உதவி ஆசிரியர் எஸ்.டி.கீதா நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here