காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

காஞ்சிபுரம்; செப், 08 –

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும் இரவு காவலர் பணிகளுக்காக மொத்தம் 32 காலியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. மசால்சி பணிக்காக ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு காவலர் பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கப் படவேண்டும் என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 அதற்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்புகள் பின் வரும்படி இருத்தல் வேண்டும். விண்ணப்பவரின் வயது வரம்பு 18 வயதிற்கு குறையாது இருத்தல் வேண்டுமென்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 35 என்றும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் வயது வரம்பு 32 எனவும் பொதுப் பிரிவினர்களுக்கு வயது வரம்பு 30 எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப படிவத்தில் பெயர், தந்தைப்பெயர், பிறந்த தேதி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி, கல்வித்தகுதி,முன்னுரிமை விவரம், மதம், இனம், சாதி உட்பிரிவு விவரம், நிரந்திர முகவரி, காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதன் விவரம் தெரியப்படுத்த வேண்டும். மேலும் தங்கள் விண்ணப்ப படிவத்தில் இணைத்து உள்ள ஆவணங்கள் குறித்த தகவலைக் குறிப்பிட்டு மசால்சி பணி விண்ணப்பம், இரவு காவலர் பணி விண்ணப்பம் என்று தலைப்பிட்டு வரும் 30.9.2019 மாலை 5.45 க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  ( பொது ) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here