கும்பகோணம், ஏப். 16 –
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஒன்றிய, பேரூராட்சி, நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட விருப்பவேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று கும்பகோணத்தில் பெறப்பட்டது. முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளர் கே சி கருப்பண்ணன் ஆகியோர் அவர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற்றனர்.
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் ஒன்றியம் மற்றும் திருபுவனம் நிர்வாகிகள் பதவிக்கு ஏற்கனவே இருந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், போட்டியாக சிலர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதனால் தற்போது பொறுப்பில் உள்ளவர்களுக்கும் புதிதாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது.