பூவிருந்தவல்லி, மார்ச். 31 –

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ் கட்டிகளை ஏற்றிக்கொண்டு கடைகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார்.

மேலும் அப்போது பூவிருந்தவல்லி அடுத்த பழஞ்சூரில் சாலையோரம் சரக்கு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு ஐஸ் கட்டிகளை சப்ளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பழஞ்சூர், எம்ஜிஆர் தெருவை சேர்ந்த ரகு என்பவரது மகன் அஜய்குமார் (15), என்பவர் ஐஸ்கட்டி வாங்குவதற்காக மொபெட்டில் வந்துள்ளார். மேலும் இவர் தன்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சத்தியா என்ற ஓட்டுநர் மதுரவாயலில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி மீன் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனம் பழஞ்சூர் பகுதியில் வரும் போது, அவ்வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த ஐஸ் கட்டியுடன் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த சுரேஷ் வாகனத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது. அச்சமயம் ஜஸ் கட்டி வாங்க வந்த மாணவன் அஜய்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இவ்விபத்தில் டிரைவர்கள் சுரேஷ் மற்றும் மீன் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சத்யா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

மேலும் இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர் அஜய்குமார் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here