கும்பகோணம், மே. 18 –

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளித்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் உள்ள ஜெயண்ட் வீலின் இரு பெட்டிகள் ஒன்றோடு ஓன்று மோதி விபத்து ஏற்பட்டது இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

மேலும் அப் பொருட்காட்சியை காண வந்த காவலர் உதவியுடன். பெட்டியில் உள்ளவர்களை பாதுகாப்பாக கீழயிறக்கி காப்பாற்றினார்கள் மேலும் இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பவில்லை. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை. நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி திடலில் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பொருட்காட்சியில் நேற்று இரவு ஜெயன்ட் வீலின்  இரு பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஜெயிண்ட் வீல் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பெட்டியாக கீழே கொண்டு வரப்பட்டு அதில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தின் போது இப்பொருட் காட்சியை காண வந்த விக்னேஷ் குமார் என்ற காவலர் பெட்டியில் சிக்கிய நபர்களை காப்பாற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை தொடர்ந்து பொருட்காட்சியில் உள்ள இராட்டினம் போன்ற விளையாட்டு சாதனங்கள் நிறுத்தப்பட்டன.

இந்த ஜெயண்ட் வீலில் நடைபெற்ற விபத்துக் குறித்து மேற்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல்லவேளையாக இவ்விபத்தில் யாருக்கும் உடல் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here