காஞ்சிபுரம், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அதிமுக புதிய கொடி ஏற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைப் பெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் சிறப்புரை நிகழ்த்தினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 50-வது வார்டு பகுதியில் அதிமுக வட்ட செயலாளர் டி பிரவீன்குமார் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் முன்னிட்டு கட்சிக்கொடி ஏற்றி கல்வெட்டினை திறந்து வைத்தும் கடந்த அதிமுக ஆட்சியின் நான்கரை ஆண்டு கால சாதனைகள் குறித்த தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் பேசுகையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் இன்றைய விடியா தி மு க அரசு முடக்கி விட்டதாகவும், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவோம் எனக் கூறிவிட்டு தகுதி உள்ள குடும்ப தலைவிக்கு வழங்கி குடும்பத்தில் பெண்கள் மத்தியில் சண்டையை ஏற்படுத்திய அரசாக விளங்குவதாக திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். மேலும் பேசுகையில் கஞ்சா வழக்கில் 2000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியவருக்கு தமிழக டிஜிபி பாராட்டுதலும் பரிசுகளும் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியுமா மேலும் கிரிக்கெட் விளையாடவே தெரியாதவர் கோப்பை வாங்கியதாக அமைச்சர் பரிந்துரையின் பேரில் முதல்வர் பாராட்டினை தெரிவித்தது வெட்கக்கேடான விஷயம் என்றும் முதல்வருக்கு உறுதுணையாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் பணியை மெத்தனமாக செய்வதிலிருந்து பொய்யான பாராட்டுதலை வழங்குவதாக அப்போது முன்னாள் அமைச்சர் தெருமுனை பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் யார் ஒருவரையும் விசாரிக்காமல் பாராட்டுதலையும் பரிசுகள் வழங்குவதிலும் பரிசு வழங்கியவரை யார் என்றே தெரியாமல் பாராட்டு தெரிவிப்பதிலுமே இவ்வரசு சரியான நிலைப்பாட்டை எடுப்பதில்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன் அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி, கோல்ட் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.