தஞ்சாவூர், ஜூன். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு….

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்று சேர்ந்து வந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தஞ்சை மாவட்டம், குளிச்சப்பட்டு கிராமத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் சமுதாய மக்கள் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களுக்கு சொந்தமான வீரனார் கோவில், அய்யனார் கோவில் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான மசூதி ஆகியவைகள் அக்கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் அய்யனார் கோவில் வீரனார் கோவில் மசூதி இருக்கும் இடத்திற்கு அருகில் தனியார் இடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறி பணிகள் தொடங்கி தற்போது அதனை இந்துக்கள் பயன்படுத்தும் மயான கொட்டகையாக மாற்றும் பணியை தொடங்கி உள்ளனர்.

ஊரின் மையப் பகுதியில் மயான கொட்டகை அமைப்பதால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மயான கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here