ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ரயிலடி ஒத்த சரகு பகுதியில் அமைக்கப் பட்டுள்ள புதிய 100 கே.வி மின் திறன் கொண்ட மின்மாற்றி – மக்கள் பயன்பாட்டிற்காக நகர மன்ற உறுப்பினர் சபா, ஜனாரத்தினம் முன்னிலையில் மின் வாரிய செயற்பொறியாளர் சிவ செந்தில்நாதன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை, பிப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்த சரகு பகுதியில், குறைந்த மின் அழுத்தக் குறைபாடினால் அப்பகுதியில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மின்சாரப் பிரச்சினைகளால் வெகு நாட்களாக கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி வந்தனர்.

மேலும் அது தொடர்பாக பல்வேறு காலக் கட்டங்களில் புதிய மின்மாற்றி அமைத்து சீரிய அளவிலான மின்சாரத்தை தங்குதடையின்றி வழங்கிட வேண்டும் என நீண்ட நாட்களாக மின்வாரியம் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பலனாக இன்று அவர்கள் கோரிக்கையை நகர் மன்ற உறுப்பினர் சபா அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் 100 kV மின் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை  அப்பகுதியில் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டு வருவதற்கான பணியை மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மிகுந்த திறனுடன் செயலாற்றினார்கள்.

அதனை சிறப்பித்திடும் வகையில் அப்பகுதிமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து அம் மின்மாற்றி சிறப்புடன் செயலபட வேண்டி இறைவழிபாடுகள் செய்யும் துவக்க விழா நடைப்பெற்றது. தொடர்ந்து அதனை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயற்பொறியாளர் சிவ செந்தில்நாதன் திறந்து வைத்தார்.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்நிகழ்வில் உதவி மின் பொறியாளர் செந்தில்குமார் நகர மன்ற உறுப்பினர் சபா, ஜனாரத்தினம் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பணியாளர்கள்,  பொதுமக்கள்,  உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்று அவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here