நன்னிலம், மே. 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்…

திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர்.

இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் உமா தம்பதியரின் 15 வயது மகன் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள வயல்வெளியில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.

அப்பொழுது விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது முருகானந்தம் என்பவரின் 15 வயது மகன் கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்திய சவுக்கு மரத்திலான ஸ்டெம்ப் -பினால் அஜித் குமாரின் நெற்றி பொட்டில் குத்தியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் மயங்கி விழுந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அஜித் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

அங்கு அஜித்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அஜித் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அஜித்குமாரின்  உடல் உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித் குமாரின் உடன் பிறந்த சகோதரிகள் மூவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில்.. மற்ற மூன்று சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.. ஒரே ஆண் மகனான அஜித்குமார் இறந்ததில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here