தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது.

தென்ஆப்பிரிக்க அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 48 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றி 9-வது இடத்தில் இருந்த கபில்தேவ் (434) சாதனையை முறியடித்தார்.

92 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றிய அவர் 7-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பிராட்டுடன் இணைந்து அந்த இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 126 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here