டர்பன்:

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என்ற கணக்கில் உதை வாங்கிய இலங்கை அணி, ஸ்டெயின், பிலாண்டர், ரபடா, டுனே ஆலிவர் ஆகிய தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக கூட்டணியிடம் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான்.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணி உள்ளூரில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. அண்மையில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதும் இதில் அடங்கும். அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here