சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த பாரதிமோகன் அறக்கட்டளை சார்பாக நாள்தோறும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உணவுகள் வழங்கி வரும்போது சீர்காழி அருகே சட்டநாதபுரம் புறவழிச் சாலையில் பேருந்து நிலையத்தில் மனநல பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை அப்பகுதியில் இருந்து உள்ளார்.அவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து அவர்களது வாகனத்தில் ஏற்றிச்சென்ற அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட பாரதி மோகன் அறக்கட்டளை சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் வெகுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





















