காஞ்சிபுரம், மே. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். யானை உற்சவத்தை முன்னிட்டு இன்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மஞ்சள் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகை பூ மற்றும் பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து, மஞ்சள் பட்டு உடுத்திய தங்கயானை வாகனத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க,வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, மஞ்சள் பட்டு உடுத்திய தங்க யானை வாகனத்தில் வரதராஜ பெருமாள் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல கோவில் இருந்து கோபுர வாசலில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை செய்து கொண்டு கோபுர தரிசனம் தந்தார்.

இதனைத் தொடர்ந்து தங்க யானை வாகனத்தில் குடையுடன் சன்னதி வீதி வழியாக திருவீதி உலா புறப்பட்டார் தங்க யானை வாகனத்தில் 15கிலோமீட்டர் தூரத்திற்கு வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் வழிநெடுக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here