காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை விந்தியா சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில் தான் எனவும் மேலும் இங்கிருந்து போனவர் தாய் வீட்டை பற்றித் தப்பா பேசுவது தவறு எனக் கூறினார். மேலும் திமுக போல் அதிமுக ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை எனவும் மேலும் இவ்வியக்கம் மக்களுக்காக உழைத்தது என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது இந்த இயக்கத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது, இந்த இயக்கம் பிளவு படாது, தேர்தலுக்குப் பின்பு எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் என அப்போது விந்தியா தெரிவித்தார்.






















