திருத்துறைப்பூண்டி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற் கல்வித்துறை, திருவாரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருத்துறைப்பூண்டி டவுன் லைன் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் கூடைப்பந்து பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து வளாகத்தில் இனிதே நடைபெற்றது.
மேலும் அந் நிகழ்ச்சியில் ஆசிரியர் கழக செயலாளர் முகமது இரஃபீக் வரவேற்புரை நிகழ்த்த, உதவி தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை அந் நிகழ்விற்கு வகித்தார். மேலும் ட்ரிம்ஸ் கூடைபந்து கழக செயலாளர் ஜவஹர், ராய் டிரஸ்ட் இன்டர் நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இனிதாக நடைப்பெற்ற அந்நிகழ்வினை திருத்துறைப்பூண்டி டவுன் லயன் சங்கத் தலைவர் ஆசிரியர் சின்னதுரை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவ்விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் மாணிக்கவாசகம், ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் சிவகுமார் ,ட்ரீம்ஸ் கூடைப்பந்து கழக தலைவர் சரவணன், துணைத் தலைவர் சம்பத் சௌந்தர்ராஜன் , பாலசுப்ரமணியன், பயிற்சியாளர் தமிழரசன் ,
செந்தில், சம்பத் நல்ல தம்பி, முகவர் சரவணன், பாலாஜி, கலை ஆசிரியர் அன்புமணி, சாரணர் இயக்க மாவட்ட செயலாளர் சக்கரபாணி, மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பல்கலைகழக முன்னாள் கூடைப்பந்து வீரர் இராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவின் நிறைவில் அனைவருக்கும் ட்ரிம்ஸ் கூடைப்பந்து கழக து.தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி தெரிவித்து நன்றியுரை நிகழ்த்தினார்.
மேலும் நல் நூலகர் ஆசைத்தம்பி அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த இலவச பயிற்சி முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி பெற உள்ளனர். ட்ரீம்ஸ் கூடைப்பந்து கழகம் இந்த இலவச முகாமை ஏற்பாடு செய்திருந்தது.




















